தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியாபுரம் கிங் ஆப் கிங்ஸ் பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு மற்றும் தொழுநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் முருகராஜ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தேவசுந்தரம், பாலன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடையே டெங்கு மற்றும் தொழுநோய் தடுப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
அப்போது வீட்டின் சுற்றுப்புறத்தில் தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், பிளாஸ்டிக் கப்புகள் போன்ற பொருட்களை போட மாட்டேன். வீணான பொருட்கள் ஏதேனும் கிடந்தாலும் உடனே அகற்றி விடுவேன். வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடம், சிமெண்ட் தொட்டிகள், டிராம்கள் ஆகியவற்றை கொசு புகாத வண்ணம் மூடி வைப்பேன். வாரம் ஒரு முறை கழுவி சுத்தம் செய்வேன். இதன்மூலம் ஏடிஎஸ் கொசு வராமல் தடுக்க தடுப்பேன். நான் கற்றுக் கொண்டதன் மூலம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு உருவாகாமல் பார்த்துக் கொள்வேன். மேலும்கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்ற உறுதி மொழியும் எடுக்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.