• vilasalnews@gmail.com

மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டம் எப்பொழுது? அமைச்சர் கீதா ஜீவன் கொடுத்த தகவல்!

  • Share on




ஊரகப் பகுதிகளில் மக்களின் இருப்பிடம் தேடி  கோரிக்கைகளை பெற்று அவர்களுக்கு தீர்வளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில் இன்று வாலசமுத்திரம், குறுக்குச்சாலை,  சந்திரகிரி, கே .சண்முகபுரம் வள்ளிநாயகபுரம், கக்கரம்பட்டி   ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் குறுக்குசாலையில் நடைபெற்றது. முகாமில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு   பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு பொதுமக்களின் மனுக்களை பதிவேற்றம் செய்யப்படுவதையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து பயனாளிகளுக்கு  கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும்  வழங்கினார். 


 பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்:-

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது 15 நாட்களில் காணப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். மேலும் இந்த முகாமில் மாற்று திறனாளிகள் துறை, சமூக நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகள் மூலமாக பட்டா மாறுதல், மின் இணைப்பு பெயர் மாற்றம், வீட்டு தீர்வை பெயர் மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இந்த முகாம்களில் தீர்வு காணப்படுகிறது. சமூக நலத்துறை மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழி கல்வியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. மேலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ் புதல்வன் திட்டத்தை நாளை கோயம்புத்தூரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.மேலும் இந்த திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழி கல்வியில் பயின்ற மாணவர்களுக்கும் இந்த திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் தற்போது பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. மக்களுடைய வாழ்வாதாரத்திற்கும் முதலமைச்சர் உதவி செய்து வருகிறார் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ் , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் வைத்தீஸ்வரன், ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், துணை சேர்மன் காசி விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி, வசந்தா, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், பஞ்சாயத்து தலைவர்கள் வள்ளியம்மாள், முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதல் : தனியார் நிறுவன சூப்பர்வைசர் பலி!

ஒரே நேரத்தில் 24 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்... தூத்துக்குடி எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் நியமனம்!

  • Share on