• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதல் : தனியார் நிறுவன சூப்பர்வைசர் பலி!

  • Share on

தூத்துக்குடியில் துறைமுகம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன சூப்பர்வைசர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி சங்கரப்பேரி மேலூரைச் சேர்ந்தவர் கதிரேசன் மகன் கார்த்திகேயன் (32). இவர் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை தனது பைக்கில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புதிய துறைமுகம் கிரீன் கேட் அருகே செல்லும் போது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது.

இதில் கார்த்திகேயன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அவரை உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தெர்மல் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சோபா ஜென்சி வழக்குப் பதிந்து, லாரியை ஓட்டி வந்த அம்பாசமுத்திரம் வீரவநல்லூரை சேர்ந்த கந்தசாமி மகன் ராஜசேகரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • Share on

பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி சிறார் நலவாழ்வுத்திட்ட பயிற்சி!

மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டம் எப்பொழுது? அமைச்சர் கீதா ஜீவன் கொடுத்த தகவல்!

  • Share on