• vilasalnews@gmail.com

பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி சிறார் நலவாழ்வுத்திட்ட பயிற்சி!

  • Share on

சாத்தான்குளம் வட்டாரத்தில் பணியாற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு பள்ளி சிறார் நலவாழ்வுத் திட்டம் குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது. 


ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பள்ளி சிறார்களுக்கான நலவாழ்வு திட்டத்தினை சிறப்பாக செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவின் பேரிலும், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.பொற்செல்வன்  ஆலோசனையின் பேரிலும், சாத்தான்குளம் வட்டாரத்தில் பணியாற்றும் அனைத்து பள்ளிகளின் ஆசிரிய பிரதிநிதிகளுக்கும் தூய இருதய ஆண்கள் துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.  


இந்த பயிற்சி முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் ஐலின் சுமதி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் பாண்டியம்மாள்,  ரம்யா மற்றும் பீட்டர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பள்ளி சிறார் நல வாழ்வு திட்ட மருத்துவ அலுவலர் ரெய்சா பள்ளி சிறார்களுக்கு இளம் வயதிலேயே இருதய நோய் கண்டறியப்பட்ட மாணவர்ளை வெள்ளிக்கிழமை தோறும் மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுதல், வியாழன் தோறும் விஃப்ஸ் இரும்புச்சத்து மாத்திரை வழங்குதல், கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் பார்வை குறைபாடு உடைய மாணவர்களை கண்டறிந்து இலவச சிகிச்சை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்குதல், குடற்புழு நீக்க மாத்திரை காலமுறைப்படி வழங்குதல், வளர் இளம் பெண்களுக்கு புதுயுகம் திட்டத்தின் கீழ் இலவச சானிட்டரி நாப்கின் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக  செயல்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பவர் பாயிண்ட் மூலம் விளக்கமளித்தார். 


சுகாதார ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர் செல்வதாஸ், மந்திரராஜன், ஜெயபால், நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக கலந்து கொண்ட ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

  • Share on

குறுக்குச்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி புரோட்டா மாஸ்டர் உயிரிழப்பு!

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதல் : தனியார் நிறுவன சூப்பர்வைசர் பலி!

  • Share on