• vilasalnews@gmail.com

குறுக்குச்சாலையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி புரோட்டா மாஸ்டர் உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் மேலரத வீதியைச் சேர்ந்த ராஜசேகர் மகன் முனியசெல்வம் (25). இவர் தூத்துக்குடியில் உள்ள பிரபல ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் எட்டயபுரம் நோக்கி சென்றுள்ளார். அப்போது அவரது இரு சக்கர வாகனம் நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் குறுக்கு சாலை பகுதியில் உள்ள தனியார் எடை நிலையம்  அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக  சாலையோரமாக உள்ள தடுப்பு கம்பி மீது மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த முனியசெல்வம் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார். 

இது குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த முனிய செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

பஸ் இயக்க கோரி உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு அதிகாரிகள் நடத்திய சமாதான கூட்டம் தோல்வி இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு

பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி சிறார் நலவாழ்வுத்திட்ட பயிற்சி!

  • Share on