• vilasalnews@gmail.com

காரங்காடு ஶ்ரீ சிவசந்தடியம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூர விழா!

  • Share on

சாத்தான்குளம் அருகே காரங்காடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சிவ சந்தடியம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே காரங்காடு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசந்தடியம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டிற்கான ஆடிபூரத் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ சிவசந்தடியம்மன் அன்னைக்கு திருவளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு அம்மன் முன்னிலையில் வளைகாப்பு நடத்தப்பட்டது. 

மேலும் , திருமணத் தடை உள்ள கன்னி பெண்களும் பூஜையில் கலந்து கொண்டனர். வளைகாப்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு காலை 5.00  மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர்மக்கள் செய்து இருந்தனர்.

  • Share on

சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு முழு நேர மகப்பேறு மருத்துவர் நியமிக்க வேண்டும்!

விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

  • Share on