• vilasalnews@gmail.com

சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு முழு நேர மகப்பேறு மருத்துவர் நியமிக்க வேண்டும்!

  • Share on

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்கக் கூட்டம் நடந்தது. சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆத்திக்குமார் தலைமை தாங்கினார். சாத்தான்குளம் சித்த மருத்துவர் டாக்டர் வைகுண்டமணி, அரசு உதவி மருத்துவர் டாக்டர் தர்ம கிருஷ்ணராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செவிலியர் கண்காணிப்பாளர் வயலின் சுகிர்தபாய் வரவேற்றார்.

பஞ்சாயத்து தலைவர்கள் புதுக்குளம் பாலமேனன், சுப்பராயபுரம் சுயம்புத்துரை, சாத்தான்குளம் நகர திமுக செயலாளர் மகா இளங்கோ,  பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜான்சிராணி ஆகியோர் பேசினர். பேரூராட்சி மன்ற பணியாளர்கள் கிங்ஸ்டன், அசாருதீன், செவிலியர்கள் ஞான செல்வி, பரமேஸ்வரி, பெல்சியாள், ஸ்ரீதேவி, வீரம்மாள், பத்மா, அனிஷா, எக்ஸ்ரே பிரிவு சுனிதா, மருந்தாளுநர் சங்கரமணி, ஆய்வக நுட்புனர் அம்பிகா, பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகாராஜன், ரமேஷ், நடராஜன், கனி, செல்வி, காப்பீடு திட்ட அலுவலர் அனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதில், சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு முழு நேர மகப்பேறு மருத்துவர் நியமிக்க வேண்டும் என கூட்டத்தில் பேசியவர்கள் கோரிக்கை விடுத்தனர். சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர் பற்றாக்குறை உள்ளதால் மருத்துவமனை தூய்மைப் பணி வகைக்காக மருத்துவமனை தோட்டம் மற்றும் வளாகத்தை கிராம பஞ்சாயத்தில் உள்ள மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை கொண்டு மாதம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். பேரூராட்சி  சுகாதாரப் பணியாளர் மூலம் மருத்துவமனையை வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக குடிநீர் இணைப்பு ஒன்று வழங்க வேண்டும். மருத்துவமனைக்கு தேவையான  சுத்திகரிக்கப்பட்ட வெந்நீர் வழங்கும் கருவி அமைக்க வேண்டும். இதற்கு நோயாளிகள் நலச் சங்க உறுப்பினர்கள் முழு ஆதரவு தர வேண்டும் என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் அரசு மருத்துவமனை மருந்தாளுநர் சித்திரை ராஜன் நன்றி கூறினார்.

  • Share on

கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் கொம்மடிக்கோட்டை அரசுப்பள்ளியில் மரக்கன்று நடப்பட்டது!

காரங்காடு ஶ்ரீ சிவசந்தடியம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூர விழா!

  • Share on