கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் கொம்மடிக்கோட்டை அரசுப்பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, தூத்துக்குடி நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்லம் சார்பில் சாத்தான்குளம் கொம்மடிக்கோட்டை சந்தோஸ் நாடார் அரசு மேல் நிலைப்பள்ளியில் வைத்து முன்னால் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் ஆறாவது நினைவு தினத்தில், கலைஞர் நினைவை போற்றும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் எம்.ஏ.தாமோதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளியின் அறிவியல் ஆசிரியர் கருணாகரன், ஓவிய ஆசிரியர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்லத்தின் நிர்வாக இயக்குனர் அ. முத்துப்பாண்டியன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தலைமை ஆசிரியர் ஷிபாஜினி அமுதா மரக்கன்று நடவுப்பணியை துவக்கி வைத்தார். உடற் கல்வி ஆசிரியர் சித்திரைக்குமார், நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்ல ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், பேரிடர் மேலாண்மை அறக்கட்டளை அறங்காவலர்கள் முருகேஸ்வரி, புஸ்பவேணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக துளசி சோஷியல் டிரஸ்ட் இயக்குனர் தூத்துக்குடி தனலெட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியின் முடிவில் சமாதானம், சமத்துவம் சகோதரத்துவோம், மதசார்பின்மை குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.