தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறையின் மூலம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்துணவு மையங்களில் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களாக பணிபுரிபவர்களுக்கு சத்துணவு அமைப்பாளர்களுக்கான பதவி உயர்வு ஆணைகள் வழங்கும் விழா இன்று ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் கலந்துகொண்டு சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு சத்துணவு அமைப்பாளர்களுக்கான பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார்.
இதில், யூனியன் ஆணையாளர் வசந்தா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்துணவு பச்சை பெருமாள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.