கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு சண்முகையா எம்எல்ஏ, யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் அருகே அயிரவன்பட்டி கிராமத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்துமரியாதை செலுத்தினார். இதில், வழக்கறிஞர் அணி விஜி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.