கயத்தார் சுங்கச்சாவடியில் போலீசார் சோதனையில் சுமார் 300 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பிடிபட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவர்லால் பதி என்பவருடைய மகன்முகேஷ் பட்டி ( 32), அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்பாம் என்பவருடைய மகன் சந்திப் குமார் ( 27 ) மற்றும் நெல்லை மாவட்டம், நாராயணம்மாள்புரம் சந்தி தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் மனோகர் ( 22), ஆகிய மூன்று பேரும் பெங்களூரில் இருந்து திருநெல்வேலிக்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை இன்னோவா காரில் கடத்திச் வந்துள்ளனர்.
இந்த காரை கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழ்செல்வன், குருசாமி மற்றும் போலீசார்கள் ஏட்டு மாரிமுத்து, நாராயணசாமி, தாமரைக்கண்ணன் ஆகியோர் கயத்தாறு சுங்கச்சாவடியில் நின்று சோதனையிட்டதில் சந்தேகத்திற்கு இடமான அந்த இன்னோவா காரில் வந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் காரை சோதனை செய்ததில் சுமார் 300 கிலோஎடைகொண்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. பின்னர் புகையிலைப் பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய இனோவா காரையும் பறிமுதல் செய்து, மூன்று வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.