ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் கலைஞர் கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருஉருவப்படத்திற்கு சண்முகையா எம்எல்ஏ மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் பேருந்து நிலைய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தகலைஞர் கருணாநிதியின் திருஉருவப்படத்திற்கு, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, நகர செயலாளர் லிங்கராஜ், வர்த்தக அணி முத்துக்குமார், சிறுபான்மை அணி ஞானதுரை, மாவட்ட பிரதிநிதி ஜோசப், மோகன், நெசவாளர் அணி ஈசன், சுரேஷ், மாவட்ட இளைஞரணி தங்கத்துரை பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் சிவன், ஆதி திராவிடர் அணி கருப்பசாமி, பஞ்சாயத்து தலைவர் மாரிச்செல்வம், கிளைச் செயலாளர் சற்குண பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.