• vilasalnews@gmail.com

கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா!

  • Share on

சாத்தான்குளம் அருகே கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 13வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி ஆட்சி குழு தலைவர் அத்வைதானந்தம் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் சுந்தரலிங்கம், இணைச் செயலர் காசியானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை வரவேற்புரை நிகழ்த்தி அறிக்கை வாசித்தார். 

இவ்விழாவில் தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி பொது மேலாளர் அசோக் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 150 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார். மாணவர்களின் எதிர்கால பயணம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தன்னுடைய சிறப்புரை மூலமாக கூறி, அவர்களை ஊக்குவித்தார். கல்லூரி துணை முதல்வர் மகேஷ் குமார்  விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். மேலும் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவியரை வாழ்த்தினர். மாணவர்கள் பட்டம் பெற்றதைக் கண்டு பெற்றோர்களும் மனம் மகிழ்ந்தனர்.

  • Share on

சாத்தான்குளம் அருகே சைக்கிள் மீது பைக் மோதல் : இருவர் காயம்!

புதியம்புத்தூரில் கலைஞர் கருணாநிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு தினம் : சண்முகையா எம்எல்ஏ மலர் தூவி மரியாதை!

  • Share on