சாத்தான்குளம் அருகே சைக்கிள் மீது பைக் மோதியதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள மேல புளியங்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் வேலாயுத பெருமாள் ( 75.) தச்சு தொழிலாளியான இவர் புளியங்குளம் பஸ் நிறுத்தம் அருகில் சைக்கிளுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது செட்டிகுளம் பகுதியில் இருந்து பேய்குளம் நோக்கி பைக்கில் வந்த தெற்கு இளமால்குளம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஆறுமுக பெருமாள் (வயது 50.) என்பவர் வேலாயுத பெருமாள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வேலாயுத பெருமாள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.