• vilasalnews@gmail.com

எட்டயபுரம் புது அம்மன் கோவில் ஆடி மாத கொடை விழா!

  • Share on

எட்டயபுரம் கீழரத வீதியில் அமைந்துள்ள புது அம்மன் கோவில் ஆடி மாத கொடை விழாவில் பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.

 எட்டையபுரம் கீழரத வீதி துர்க்கை அம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து புது அம்மன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து தீபாரதனை நடந்தது.  தொடர்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார். மாலையில் அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது. இரவு முளைப்பாரி கண் திறப்பு நிகழ்ச்சியும் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. அதிகாலை அம்மனுக்கு சிறப்பு படையல் பூஜையும் நடந்தது.

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே நாகம்பட்டி கல்லூரியில் தமிழ் சூழலில் ஆசிரியர் - மாணவர் பன்னாட்டுக் கருத்தரங்கம்!

சாத்தான்குளம் அருகே சைக்கிள் மீது பைக் மோதல் : இருவர் காயம்!

  • Share on