தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் - சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த பெரிய மாடசாமி என்பவரின் மகன் குருசாமி (52). இவர் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார்.
குருசாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் இதனால் அடிக்கடி வீட்டில் சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மது போதையில் 6.8.2024 செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் அருகே குருசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், குருசாமியின் உடலை கைப்பற்றி விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.