தட்டார்மடம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் குமார் மகன் சுப்பிரமணியன் ( 28 ) இவர் முதலுரில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டு காரரான ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த வியாபாரி லிங்க குமார் ( 25 ) இருவருக்கும் இடையே நில பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சுப்பிரமணியபுரம் விலக்கில் உள்ள இசக்கியம்மன் கோவில் அருகே சுப்பிரமணியன் நின்று கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த லிங்க குமார் முன் விரோதம் காரணமாக காரை கொண்டு சுப்பிரமணியன் மீது பயங்கரமாக மோதினாராம். இதில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சுப்பிரமணியன் தட்டார் மடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தட்டார் மடம் இன்ஸ்பெக்டர் அனிதா வழக்கு பதிவு செய்து தலைமறைவான லிங்க குமாரை தேடி வருகின்றனர்.