• vilasalnews@gmail.com

சாத்தான்குளம் அருகே வாலிபர் மரணத்தில் சந்தேகம்... 2 நாட்கள் தொடர்ந்த உறவினர்கள் போராட்டம்!

  • Share on

சாத்தான்குளம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து 2வது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தநிலையில், அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தைத் தொடர்ந்து, அவரது உடலை உறவினர்கள் பெற்று சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கடாட்சபுரம் சண்முகபுரத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டி மகன் சுந்தர் (30). மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் உறவினர் ஓட்டலில் வேலை பார்த்த இவர், 5 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை சுப்பராயபுரம் விலக்கில் சாஸ்தா கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த சாத்தான்குளம் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாத்தான்குளம் அருகே கபடி போட்டி நடந்தது. இதில் ஏற்பட்ட தகராறில் சுந்தர் தாக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்று அவரது உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். இதில் போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி நேற்று முன்தினம் முதல் 2வது நாளாக நேற்றும் சுந்தரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், சாத்தான்குளம் டிஎஸ்பி கென்னடி, உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார்  உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தற்கொலை வழக்கு மாற்றி அமைக்க வேண்டும். சந்தேகத்துக்கு இடமாக உள்ள  நபர்களை அழைத்து விசாரணை நடத்தி   உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதனை ஏற்ற போலீசார்  விசாரணை நடத்தி  முகாந்திரம்  இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை அடுத்து இறந்த சுந்தரின் உறவினர்கள் அவர்கள் உடலை உடலைப் பெற்று சென்றனர்.

  • Share on

ஓணமாக்குளம் கோவில் வருஷாபிஷேக விழா : யூனியன் சேர்மன் ரமேஷ் சாமி தரிசனம்!

தட்டார் மடம் அருகே முன்விரோதம் காரணமாக சலூன் கடை உரிமையாளரை கார் ஏற்றிக் கொலை செய்ய முயற்சி : தப்பியோடிய வியாபாரிக்கு வலை!

  • Share on