• vilasalnews@gmail.com

தூத்துக்குடி பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது - 1¼ சவரன் தங்க நகை மீட்பு!

  • Share on

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 6வது தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி சண்முகசெல்வி (48) என்பவர் தூத்துக்குடி  சேதுபாதை சாலையில் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று அந்த பேக்கரிக்கு வந்த மர்ம நபர் சண்முகசெல்வி அணிந்திருந்த 9 சவரன் தங்க நகையை பறிக்க முயற்சித்தபோது அதில்  1¼ சவரனை மட்டும் பறித்துவிட்டு சென்றுள்ளார்.

இதுகுறித்து சண்முகசெல்வி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 8வது தெருவை சேர்ந்த வீரப்பன் மகன் சந்தோஷ் (22) என்பவர் மேற்படி சண்முகசெல்வியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

உடனே போலீசார் சந்தோஷை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 60,000 மதிப்புள்ள 1¼ சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை!

விளாத்திகுளம் அருகே புதிய சாலை : பணிகளை மார்க்கண்டேயன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

  • Share on