• vilasalnews@gmail.com

பாஞ்சாலங்குறிச்சியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே  கவர்னகிரியைச் சேர்ந்த ஓட்டப்பிடாரம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மோகனின் தந்தை குண்டன் பெருமாளின் 17 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று சின்ன மாடு, பூஞ்சிட்டு மாடு என இரு பிரிவாக மாட்டு வண்டி  எல்கை பந்தயம் நடைபெற்றது. 

இதில் சின்ன மாட்டு வண்டி போட்டியில் 17-மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 41-மாட்டு  வண்டிகள்  கலந்து கொண்டன. போட்டிகளை அதிமுக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற  உறுப்பினரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார். இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


6மைல் தூரம்  நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில்  முதல் பரிசை சங்கரபேரி ராஜா மாட்டு  வண்டியும், 2-வது பரிசை மூலக்கரை முத்துஸ்ரீ மாட்டு வண்டியும், 3-வது பரிசை மேட்டூர் சுகன் கார்த்திக் மாட்டு வண்டியும், 4 பரிசு நாலந்துலா உதயம் துரைப்பாண்டி மாட்டு வண்டியும் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற 5-மைல் தூரம் பூச்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் வடக்கு சிலுக்கன்பட்டி  சபரிமுத்து மாட்டுவண்டி முதலிடத்தையும், 2-வது சிங்கிலிபட்டி ஆனந்த் 3-வது தருவைகுளம் தமிழ் செல்வன் வண்டியும் 4-வது மேல வேலாயுதபுரம் முனீஸ்வரி, மாட்டு வண்டியும் பிடித்தன.

பந்தயத்தை  ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று  கண்டு ரசித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வண்டி உரிமையாளர்களுக்கும், மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும்  பரிசு தொகை வழங்கப்பட்டது.

  • Share on

கொலை முயற்சி, கொலை மிரட்டல் : தூத்துக்குடியில் 2 ரவுடிகள் கைது!

செவல்குளம் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு கபாடி போட்டி!

  • Share on