• vilasalnews@gmail.com

கொலை முயற்சி, கொலை மிரட்டல் : தூத்துக்குடியில் 2 ரவுடிகள் கைது!

  • Share on

தூத்துக்குடியில் வெவ்வேறு பகுதிகிளல் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  உத்தரவின்படி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  ராஜசுந்தர்  மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சோரிஸ்புரம் - மடத்தூர் சாலையில்  உள்ள ஒரு பால் கடை முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், அவர் தூத்துக்குடி பசும்பொன் நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துக்குமார் (எ) மதுரை முத்து (34) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் முத்துகுமார் (எ) மதுரை முத்துவை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மற்றொரு சம்பவம் 

புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்  வனசுந்தர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூட்டாம்புளி பாலம் பகுதியில்  சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில், அவர் குலையன்கரிசல் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தனராஜ் மகன் ராஜலிங்கம் (எ) வாத்தால் (21) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு கத்தியால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழா நூலகம் திறப்பு!

பாஞ்சாலங்குறிச்சியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

  • Share on