திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலைஞாின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் இளைஞர் அணி சார்பில் நூலகம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதன் பேரில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவிற்கு திமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் ஒன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் முன்னிலையில், சண்முகையா எம்.எல்.ஏ., மாநில திமுக இளைஞர் அணி துணைச்செயலாளர் இன்பாரகு, ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி நூலகத்தை பார்வையிட்டு நல்ல முறையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பராமாிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான தங்கமாாிமுத்து, தெற்கு மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும் ஓன்றிய கவுன்சிலருமான அந்தோணி தனுஷ்பாலன், ஒன்றிய அவைத்தலைவர் ஜோதிடர் முருகன், துணைசெயலாளர் கணேசன், தூத்துக்குடி மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாராயணன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சதிஷ், அணிட்டன், ஒன்றிய உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பாாி, ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, ஜேசுராஜா, கிளைச்செயலாளர் பிரபாகரன், இளைஞர் அணி நிர்வாகிகள் கிங்ஸ்டன், யோகராஜ், ரெக்ஸின், ஹாிஹரன், கௌதம், மற்றும் கப்பிக்குளம் பாபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நூலகம் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் வழக்கறிஞர் பால்துரை, ஊராட்சி மன்ற உறுப்பினர் ஸ்டாலின், ஆகியோர் செய்திருந்தனர்.