• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் அருகே சிப்பிக்குளம் கடற்கரையில் குவித்த ஆயிரக்கணக்கான பொது‌மக்கள்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள சிப்பிக்குளம் தீர்த்தக்கரையில், ஆண்டுதோறும், தை, புரட்டாசி, ஆடி அமாவாசையை முன்னிட்டு விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டு வருகின்றனர்.

இதே போன்று இந்தாண்டும் இன்று ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு சிப்பிக்குளம் கடற்கரையில் அதிகாலை 5 மணி முதலே விளாத்திகுளம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து எள், பூ, தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பூஜை நடத்தி, வழிபட்டு பின் பிண்டத்தினை சிப்பிக்குளம் கடலில் கரைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடிச் சென்றனர். இதனையடுத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வந்த பொதுமக்கள் அனைவரும் சிப்பிகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் வழிபாடு நடத்தி சென்றனர்.

  • Share on

மனைவி, மகளுக்கு அரிவாளால் வெட்டு : லாரி டிரைவர் கைது!

சாத்தான்குளம் அருகே கோவில் வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் வாலிபர் உடல் மீட்பு : உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம்... போலீசார் பேச்சுவார்த்தை!

  • Share on