• vilasalnews@gmail.com

மனைவி, மகளுக்கு அரிவாளால் வெட்டு : லாரி டிரைவர் கைது!

  • Share on

கோவில்பட்டியில் மனைவி மற்றும் மகளை அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்ய முயன்ற லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.


தெற்கு திட்டக்குளம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் குணசேகரன் ( 45 ) லாரி டிரைவர். இவரது மனைவி மாரீஸ்வரி ( 39 ). தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மாரீஸ்வரி மற்றும் அவரது மகள் அன்னபூரணி என்ற ஜெயப்பிரியா அதே பகுதியில் உள்ள தாயார் வீட்டில் வசித்து வருகிறாராம்.


இந்த நிலையில், மூலநோயினால் பாதிக்கப்பட்டு வந்த மாரீஸ்வரி கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பின் சிவகாசியில் இருந்து வந்த மற்றொரு மகள் சரிதா உதவியுடன் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த குணசேகரன், மனைவி மற்றும் மகளை அவதூறாக பேசியபடி, தான் கையில் வைத்திருந்த அரிவாளால் தாக்கிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பி ஓடிவிட்டார். இதில் காயமடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மாரீஸ்வரி முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து மகள் சரிதா அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் கைது செய்தனர்.

  • Share on

சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!

விளாத்திகுளம் அருகே சிப்பிக்குளம் கடற்கரையில் குவித்த ஆயிரக்கணக்கான பொது‌மக்கள்!

  • Share on