• vilasalnews@gmail.com

சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!

  • Share on

சாத்தான்குளம் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் வழக்கறிஞர் ராம்சேகர் தலைமையில் நடைபெற்றது.  

கூட்டத்திற்கு திருநெல்வேலி மூத்த வழக்கறிஞர் மங்களா ஜவஹர்லால் , தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தனராஜ் டேவிட், ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிகளை வழக்கறிஞர் வேணுகோபால் தொகுத்து வழங்கினார். வழக்கறிஞர் சங்க செயலர் முருகானந்தம் வரவேற்றார். இதில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினர் மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.  

இதில்,  தூத்துக்குடி வழக்கறிஞர் மகேந்திரன், சாத்தான்குளம்  வழக்கறிஞர் சங்கத் தலைவர் வில்லின் பெலிக்ஸ், சாத்தான்குளம் அரசு வழக்கறிஞர் ரகுபத்மன் , வழக்கறிஞர்கள் சிவபாலன், ஜோ ஜெகதீஷ், ராஜன்சுபாஷிஸ் ,சாமுவேல் ரமேஷ் குமார், அந்தோணி ரமேஷ்குமார், ஆரோன் டேவிட், ரவீந்திரன், ரா.ராமச்சந்திரன், ஜி.ராமச்சந்திரன், செல்வ மகராஜன், பவுன்ராஜ்,  கௌசல்யா, சிவ மீனா உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். சங்க நிர்வாக குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே சட்ட விரோதமாக விற்பனைக்காக மது பாட்டில்களை வைத்திருந்தவர் கைது - 40 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்!

மனைவி, மகளுக்கு அரிவாளால் வெட்டு : லாரி டிரைவர் கைது!

  • Share on