தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே கீழ முடிமண் பேருந்து நிறுத்தம் அருகே ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று மாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த கவர்னகிரி கிராமத்தைச் சேர்ந்த செபஸ்தியான் மகன் கதிரேசன்( 27) என்பவரை பிடித்து சோதனை செய்ததில், அவர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் கதிரேசனை கைது செய்து அவரிடமிருந்து 40 மது பாட்டில்களையும் மற்றும் மது விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கதிரேசன் மீது ஏற்கனவே புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம் காவல் நிலையங்களில் சட்டவிரோத மது விற்பனை வழக்கு உட்பட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.