• vilasalnews@gmail.com

டிபன் பாக்ஸ் கேட்டு திசைதிருப்பி விட்டு பாத்திரக்கடையில் ரூ.10 ஆயிரத்தை திருடிய டிப்டாப் ஆசாமி!

  • Share on

பேய்க்குளத்தில் பாத்திர கடையில் பொருள் வாங்குவது போல் வந்த ரூ10 ஆயிரத்தை அபேஸ் செய்து சென்ற பைக்கில் வந்த மர்ம ஆசாமி மீது வியாபாரி புகார் செய்துள்ளார்.  

சாத்தான்குளம்  அருகே உள்ள சாலைபுதூரைச் சேர்ந்தவர் கோயில்ராஜ் . இவர் பேய்க்குளம் கோமானேரி செல்லும் சாலையில் பாத்திர கடை நடத்தி வருகிறார். அவர் கடைக்கு பைக்கில் வந்த டிப்டாப் நபர் ஒருவர், அவரிடம் டிபன் பாக்ஸ் கேட்டுள்ளார். அவர் டிபன் பாக்ஸை எடுக்க முயன்ற நேரத்தில் அவர் அந்த டிப் டாப் ஆசாமி, பணம் பெட்டியில்  இருந்த ரூ10 ஆயிரத்தை எடுத்து விட்டு பைக்கில் தலைமறைவாகி விட்டாராம்.   கோயில்ராஜ் டிபன் பாக்ஸை எடுத்துவிட்டு அந்த டிப்டாப் ஆசாமியை தேடியபோது, அவர் மயாயமானது மட்டுமில்லாமல் பணப்பெட்டியில் இருந்த ரூ 10 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.  இதனையடுத்து அவர்  பேய்க்குளம் பஜாரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவுகளை ஆய்வு செய்தபோது பைக்கில் டிப்டாப் ஆசாமி வேகமாக செல்வது பதிவாகி இருந்தது. 

இதனையடுத்து, கோயில்ராஜ், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் டிப்டாப் ஆசாமி பைக்  எண் ஆகியவற்றை கொண்டு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார்  வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை நடத்திவருகின்றனர்.

  • Share on

வில்வமரத்துப்பட்டியில் புதிய பேருந்து நிழற்கூடம் பூமி பூஜை : சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!

ஓட்டப்பிடாரம் அருகே சட்ட விரோதமாக விற்பனைக்காக மது பாட்டில்களை வைத்திருந்தவர் கைது - 40 மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்!

  • Share on