விளாத்திகுளம் அருகே வில்வமரத்துப்பட்டியில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிழற்கூடம் கட்டும் பணியை விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வில்வமரத்துப்பட்டி கிராமத்தில், பேருந்து நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விளாத்திகுளம் அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் 15-வது நிதிக்குழுவின் நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் வில்வமரத்துபட்டியில் புதிய பேருந்து நிழற்கூடம் அமைக்கும் பணியை விளாத்திகுளம் அதிமுக யூனியன் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன் இன்று பூமி பூஜை செய்து பேருந்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பொண்ணு, விளாத்திகுளம் யூனியன் துணை சேர்மன் சக்தி சுப்புலட்சுமி, தங்கராஜ், ஒப்பந்ததாரர் இளங்கோ மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.