தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி கலையரங்கத்தில் ஆர்இசி லிமிடெட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
ஆர்இசி லிமிடெட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் இன்று (03.08.2024) தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில்,
தூத்துக்குடி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, ஆர்இசி லிமிடெட் இயக்குனர் திருப்பதி நாராயணன், அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் லட்சுமிபதி, மேயர் ஜெகன்பெரியசாமி, சண்முகையா எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களை வழங்கி முகாமினை தொடங்கி வைத்தனர். பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.