தூத்துக்குடி ஸ்ரீ பாகம் பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ துர்க்கை அம்பிகை 53 வது ஆண்டு விழாவானது நடைபெறுகிறது.
ஆடி மாதம் 16 ம் தேதி(01.08.2024) வியாழக்கிழமை இரவு 6.30 மணிமுதல் 7.30 மணிவரை ஊஞ்சல் உற்சவம் தீப பூஜை நடைபெற்றது. ஆடி மாதம் 17ம் தேதி (02.08.2024) வெள்ளிக்கிழமை இன்று காலை 8.30 மணியளவில் விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கும்பபூஜை, துர்க்கா ஸூக்தம் ஜெபம், மற்றும் காலை அபிஷேகம் ஆரம்பம் கும்பாபிஷேகம், நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் அருள் பெற்று சென்றனர்.
இன்று மாலை திருவிளக்கு பூஜை நடைபெறுவதை தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார்.
திருவிளக்கு பூஜையினை திருக்கோவில் அதிகாரிகள், திருக்கோவில் அறங்காவலர் குழு மற்றும் ஸ்ரீ துர்கா மகளிர் வார வழிபாட்டு சங்கத்தினர் ஏற்பாடு செய்து இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில் குமார், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், செல்வம் பட்டர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பொதுமக்கள், துர்க்கை அம்பிகை மகளிர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.