அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், "மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் 18.12.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டம் ஆவாரம்பாளையத்தில் தொடங்கி வைத்தார்.
நகரப்பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பினை அடுத்து ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தை பகுதிகளிலும் விரிவுபடுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் 11.07.2024 அன்று தருமபுரியில் தொடங்கி வைத்தார்கள்.
ஊரகப் ஊரகப்பகுதிகளில் மக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அதிகளவில் அணுகும் அரசுத் துறைகளான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, எரிசக்தித் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை காவல் துறை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடுத்துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை,
கூட்டுறவுத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய 15 துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று 30 தினங்களுக்குள் தீர்வு காண்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மேலும், முதலமைச்சர் நேரடிக் கண்காணிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 2,500 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இன்று (02.08.2024) தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் குளத்தூர் ஊராட்சி இந்து நாடார் நடுநிலைப்பள்ளியிலநடைபெற்ற ஊரகப் பகுதிகளுக்கான "மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
முன்னதாக கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான ஆணையினையும், வருவாய்த்துறை மூலம் 8 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், வேளாண்மைத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களையும், மின்சாரத்துறை மூலம் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய இம்முகாமில் பதிவு செய்த 1 பயனாளிக்கு உடனே மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் முன்னிலையில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தங்கவேல், உதவி திட்ட அலுவலர் (கட்டமைப்பு) மோகன், வேளாண் அலுவலர்கள் முத்துசாமி, நவநீத கிருஷ்ணன், ஊராட்சி மன்றத் தலைவர்கள்மாலதி(குளத்தூர்), ரோஸ்மலர் (கீழவைப்பார்), சோலையம்மாள் (பூசனூர்), ஜெயலட்சுமி (புளியங்குளம்), லெக்மாள் (வீரபாண்டியாபுரம்), திருப்பதி (இனாம் வேடபட்டி), தங்கம்மாள் (அயன்செங்கல்படை), முனியம்மா (மார்த்தாண்டம்பட்டி), சக்கம்மாள்(வைப்பார்), ராமசுப்பு (த.சுப்பையாபுரம்), செண்பகவள்ளி (விருசம்பட்டி), குளத்தூர் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.