ஆழ்வார்திருநகரி வட்டார, வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி, மானாவாரியில் இயந்திரங்களை பயன்படுத்தி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பம் என்ற தலைப்பில் கட்டாரிமங்கலம் கிராமத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு, கட்டாரிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கீதாகணேசன் தலைமை வகித்தார். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ் பங்கேற்று பயிற்சியின் நோக்கம், நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, நெல், பின் உளுந்து சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் அரசின் மானியத் திட்டங்கள் குறித்து தெரிவித்தார். ஆழ்வார்திருநகரி உதவி செயற்பொறியாளர் நடராஜன், பண்ணை இயந்திரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் வழிமுறைகள் குறித்தும், உதவி செயற்பொறியாளர் முருகன், வேளாண்மை பொறியியல் துறை வழங்கப்படும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர். துணை வேளாண்மை அலுவலர் தங்கமாரியப்பன், வேளாண்மைத்துறை மூலம் வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் நிலக்கடலைபயில் சாகுபடிபோது கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் குறித்தும், வாகைகுளம் வேளாண் அறிவியல் மைய தொழில்நுடப வல்லுநர் முத்துக்குமார் நிலக்கடலையில் சாகுபடியில் களைநிர்வாகம், நீர் மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். உதவி வேளாண்மை அலுவலர் சீதாலெட்சுமி நன்றி கூறினார்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆழ்வார்திருநகரி தொழில்நுட்ப மேலாளர் ஜேசுதாசன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் நளினி, சூசைமாணிக்கம் ஆகியோர் செய்திருந்தனர்.