• vilasalnews@gmail.com

நாகம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா - யூனியன் சேர்மன் ரமேஷ் பங்கேற்பு!

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே நாகம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் மனித நேய உட்கட்டமைப்பு திட்டத்தின் மூலம் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடம் திறப்பு விழா, பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம், பள்ளி குழந்தைகளுக்கு புதிய சீருடைகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. 

இதில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை திறந்து வைத்து, பள்ளி குழந்தைகளுக்கு புதிய சீருடைகளை வழங்கினார். மேலும் SIDS திட்டத்தின் மூலம் பள்ளிக்கு ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கியதற்கு பள்ளி சார்பாகவும் ஊர் மக்கள் சார்பாகவும் யூனியன் சேர்மன் ரமேஷ்-க்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் நாகம்பட்டி மனோ கல்லூரி முதல்வர் ராமதாஸ், வட்டார கல்வி அலுவலர்கள் பவணந்தீஸ்வரன், மகாலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியை சகாய தமயந்தி, ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் விஜயலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரிய பெருமக்கள், மாணவ மாணவிகள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Share on

ஓணமாக்குளத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பயணியர் நிழற்குடை கட்டிடம் : சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!

மானாவாரியில் இயந்திரங்களை பயன்படுத்தி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி!

  • Share on