
ஓட்டப்பிடாரம் அருகே ஓணமாக்மாகுளம் கிராமத்தில் கிராமத்தில் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பயணியர் நிழற்கூடம் கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதிய பயணியர் நிழற்கூடம் கட்டிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரி, வசந்தா, பஞ்சாயத்து தலைவர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் துரைராஜ், கிராம நிர்வாக அலுவலர் நல்லையா, ஊராட்சி செயலர் ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.