• vilasalnews@gmail.com

இளவேலங்கால் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் - சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே இளவேலங்கால், ஓணமாகுளம் கொத்தாலி, தென்னம்பட்டி, மலைப்பட்டி    ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர்  சிறப்பு திட்ட முகாம் இளவேலங்கால் கிராமத்தில் நடைபெற்றது. முகாமை  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள். 

தொடர்ந்து மூன்று விவசாயிகளுக்கு  மின்கல தெளிப்பான் மற்றும் தார்பாய்களையும் மேலும் சில பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், மின்வாரிய இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவ காப்பீட்டு அட்டை  உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இம்முகாமில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர்  சாந்தி, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ், கயத்தாறு வட்டாட்சியர் நாகராஜன், நில எடுப்பு வட்டாட்சியர் செல்வகுமார், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சுசிலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா, கிரி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் பால்சாமி, சமூக நலத்துறை பிரியாதேவி, கூட்டுறவுத்துறை பாலமுருகன், ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை அலுவலர் சிவகாமி, உதவி செயற்பொறியாளர் முனியசாமி, உதவி பொறியாளர் பால் முனியசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் சாவித்திரி முருகேசன் பெருமாள், பேச்சியம்மாள், மாசானமுத்து மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Share on

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு!

ஓணமாக்குளத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பயணியர் நிழற்குடை கட்டிடம் : சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!

  • Share on