தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழஈரால் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள்.
இந்நிகழ்வில் எட்டையபுரம் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் மல்லிகா கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவநீதக்கண்ணன், கோவில்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.