ராகுல் காந்தி ஜாதி குறித்து பாராளுமன்றத்தில் பேசிய அனுராக் தாகூர் எம்பி படத்தை தீயிட்டு கொளுத்தி தூத்துக்குடியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தம்முடைய சொந்த ஜாதி எது என தெரியாதவர்கள் எல்லாம் ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுவதா? என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக மக்களவையில் பாஜக எம்பி அனுராக் தாக்கூர் விமர்சித்திருந்தார். அனுராத் தாக்கூரின் இந்தப் பேச்சை கண்டித்தும், அவரது பேச்சை கண்டிக்காத பிரதமர் மோடியை கண்டித்தும், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுடலையாண்டி, டேனியல் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அனுராக் தாகூர் எம்பி படத்தை தீயிட்டு எரித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாநகர மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் பேசுகையில்:-
பிரதமர் மோடி பாராளுமன்றத்தின் மாண்பை குறைக்கிறார். 10 ஆண்டுகள் பிரதமராக இருந்தும் பாராளுமன்றத்தில் தங்கள் கட்சிக்காரர்கள் எப்படி பேச வேண்டும் என்பதை கூட தெரிவிக்காதவர். இதனால்தான் பாஜக எம்பி அனுராக் தாகூர் பாராளுமன்றத்தில் ஜாதி பெயர் தெரியாதவர் ஜாதிவாரி கணக்கு எடுப்பது நடத்த சொல்கிறார் என்று பேசுகிறார். அவரை பிரதமர் கண்டிக்கவில்லை. ஏற்கனவே நாட்டு மக்களுக்கு எதிராக மோடி செயல்பட்டதால் தான் மக்கள் அவரை மைனாரிட்டி அரசாக உட்கார வைத்திருக்கிறார்கள். இன்னும் அவர் திருந்தவில்லை. இதனால் அவர் மிக விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி என்றார்.
ஆர்ப்பாட்டத்தில், மண்டல தலைவர் ராஜன், ஐஎன்டியுசிசி ராஜ்,,பல்வேறு பிரிவுகளின் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜான் சாமுவேல், மைதீன், பாலசுப்பிரமணியம், செல்வராஜ், தனலட்சுமி, மாவட்ட துணை தலைவர்கள் விஜயராஜ், பிரபாகரன், ஜோ பாய் பச்சக், ரஞ்சிதம் ஜெபராஜ், மாவட்ட செயலாளர்கள் நாராயணசாமி, குமார முருகேசன், முள்ளக்காடு முனிய தங்க நாடார், கிருஷ்ணன், நிர்வாகிகள் நிர்மல், கிறிஸ்டோபர், சின்ன காளை, மிக்கல் ராகுல் மற்றும் ஏராளமானோர் கலந்கொண்டனர்.