சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளர் எட்வின் அருள்ராஜ் தலைமையில் காவலர்கள் மாரியப்பன், சுந்தர்ராஜ், முருகன், அந்தோணி ராஜ், அருண் ஆகியோர் மணல் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கிருஷ்ணாபேரி வடக்கு பகுதி குளத்தில் ஜேசிபி, டிராக்டர் பயன்படுத்தி மணல் கடத்தலில் கும்பல் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசாரை கண்டதும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பினர். இதையடுத்து கடத்தலுக்கு பயன் படுத்திய ஜேசிபி மற்றும் டிராக்டர் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். போலீசார் வழக்குபதிந்து ஜேசிபி டிரைவர் கீழநாலுமூலைகிணற்றை சேர்ந்த குமார் மகன் பாலகிருஷ்ணன்(21) என்பவரை கைது செய்தனர். மேலும் ஜேசிபி உரிமையாளர் பண்டாரபுரத்தை சேர்ந்த செல்லையா மகன் குருசாமி, டிராக்டர் டிரைவர் கண்டுகொண்டான் மாணிக்கம் பிச்சையா மகன் மாடசாமி மற்றும் அதே பகுதியை சேர்ந்த கலியசுந்தர் மகன் தூண்டில்மணி ஆகிய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.