மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருப்பதை கண்டித்தும், தொடர்ந்து பாஜக அரசு தமிழகத்தை புறக்கணித்து வருவதை கண்டித்தும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ராமசாமி தாஸ் பூங்கா அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
இதை போன்று இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.