தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் வட்டார வள மையம் சார்பாக புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தல்படியும், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல் படியும் நடைபெற்றது.
பயிற்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ரஞ்சித் சாரா, 18 வயது பூர்த்தி செய்த எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு 2025க்குள் 100% எழுத்தறிவு வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். திட்டமானது ஜூலை மாதம் தொடங்கி 80 நாட்கள் கற்போர் சார்ந்த குடியிருப்புகளில் வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சி முடிந்து நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெறுவோறுக்கு தேசிய திறந்தவெளி பள்ளி மூலம் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் ஒன்றியத்தில் இருந்து 95 தன்னார்வர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியர்கள் செல்வின் ராஜசிங், ஜாகுலின் செயல்பட்டனர். பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளர் ராஜன் ஜெபஸ்டின் மற்றும் ஆசிரியர் பயிற்றுர்கள் செய்திருந்தனர். வட்டார கல்வி அலுவலர்கள் ரம்யா, பாண்டியம்மாள் மற்றும் பீட்டர் ஆகியோர் பயிற்சியினை பார்வையிட்டனர்.