• vilasalnews@gmail.com

தோட்டத்தில் மாடு மேய்ந்த தகராறில் பால் வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு : 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

  • Share on

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் மாடு மேய்ந்த தகராறில் பால் வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக தோட்ட உரிமையாளர் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சாத்தான்குளம் அருகே தெற்கு பன்னம்பாறை வடக்கு தெருயை சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் நல்லகண்ணு(37). இவர் ஆடு, மாடு வளர்த்து வருவதுடன்  பால் வியாபாரமும் செய்து வருகிறார். இவருக்கும், பன்னம்பாறை  வடவிளை ரோடு  தெருவைச் சேர்ந்த தோட்ட உரிமையாளர் வருணபாண்டியன் மகன் கொம்பையா என்பவருக்கும் தோட்டம் அருகில் மாடு மேய்ந்த தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 26ம்தேதி நல்லகண்ணு, அந்த பகுதியில் மாடு மேய்க்க சென்றபோது கொம்பையா உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து நல்லகண்ணுவை சரமாரியாக அரிவாளால் வெட்டினராம் . இதில் அவருக்கு தலை மற்றும்  காலில்  பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சாத்தான்குளம் அரசு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம்  காவல் ஆய்வாளர்  ஏசு ராஜசேகரன்  செவ்வாய்க்கிழமை  வழக்கு பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட கொம்பையா மற்றும் அதே பகுதியை சேர்ந்த நல்லையா, ராஜா, சுந்தரம் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.

  • Share on

தட்டார்மடம் ஸ்ரீமுத்தாரம்மன் கோவிலில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் 504 திருவிளக்கு பூஜை!

சாத்தான்குளம் ஒன்றியத்தில் வட்டார வள மையம் சார்பாக புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வர்களுக்கான ஒரு நாள் பயிற்சி!

  • Share on