• vilasalnews@gmail.com

தட்டார்மடம் ஸ்ரீமுத்தாரம்மன் கோவிலில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் 504 திருவிளக்கு பூஜை!

  • Share on

தட்டார்மடம் ஸ்ரீமுத்தாரம்மன் கோவிலில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் 504 திருவிளக்கு பூஜை  நடைபெற்றது .

சாத்தான்குளம் ஒன்றியம்  நடுவக்குறிச்சி கிராமம்  தட்டார்மடம்  அருள்மிகு  ஸ்ரீமுத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜை 2 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள்  இரவு மாக்காப்பு அலங்கார பூஜை, 2ஆம் நாள் காலை கற்பகவிநாயகர் கோயிலில் இருந்து தீர்த்தம் மற்றும் பால்குடம் எடுத்து வருதல், தொடர்ந்து கும்பாபிஷேகம், 12 அலங்கார தீபாராதனை நடைபெற்றன.  மாலை 6மணிக்கு இந்து அன்னையர் முன்னணி மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் 504 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.  

பூஜையில் சுற்று வட்டார பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பக்தி பாடல்கள் பாடி அம்பாளை வழிப்பட்டனர்.  இந்து அன்னையர் முன்னணி சாத்தான்குளம் ஒன்றிய தலைவி  பரமேஸ்வரி பூஜையை வழி நடத்தினார்.  இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில்  இந்து முன்னணி சாத்தான்குளம்  பொதுச் செயலர் மாயவரம் முத்துசாமி,  ஒன்றிய செயலர்கள் செல்வ முத்துக்குமார், நாகராஜ் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் செல்வகுமார்,  இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் சிவன்குடியேற்று ராமகனி,  புத்தன் தருவை கீதா,  மேலநடுவக்குறிச்சி ராதா, தட்டார்மடம் செல்வி, மகாலட்சுமி, முத்தம்மாள்புரம் மாயா, பூவுடையார் புரம் கௌசல்யா, சுஜாதா, சுகிர்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து கோவிலில் இரவு 12மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, இரவு 2மணிக்கு கிடா வெட்டி சுவாமிக்கு அசைவ படைப்பு தீபாராதனை, காலை 6 மணிக்கு உணவு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

  • Share on

மணியாச்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்!

தோட்டத்தில் மாடு மேய்ந்த தகராறில் பால் வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு : 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

  • Share on