மணியாச்சி, கொல்லங்கிணறு, பாறைகுட்டம், மேலபாண்டியாபுரம் ஒட்டநத்தம் ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மணியாச்சியில் நடைபெற்றது.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பொதுமக்களின் மனுக்களை பதிவேற்றம் செய்யப்படுவதையும் பார்வையிட்டார். பயனாளிகளுக்கு நிலங்களுக்கு வண்டல் மண் எடுப்பதற்கான ஆணை உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இம்முகாமில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் சாந்தி, ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டாட்சியர் சுரேஷ், நில எடுப்பு வட்டாட்சியர் செல்வகுமார், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சுசிலா, வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, உதவி செயற்பொறியாளர் சுடலைமுத்து, உதவி பொறியாளர் பால் முனியசாமி, பஞ்சாயத்து தலைவர்கள் பிரேமா முருகன், சரிதா ராதாகிருஷ்ணன், கிருஷ்ணவேணி, மாடசாமி, லதா மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.