தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி கூட்டம் கூட்டரங்கில்நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையர் கமலா, நகராட்சி அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாஜக நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார் தனது வார்டு பகுதியில் குடிநீர் பைப்லைன் முறையாக சீரமைக்கப்படவில்லை என்று குடிநீர் பைப் குழாய்வுடன் நகர்மன்ற கூட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது போன்ற பொருள்களை கூட்டத்திற்கு எடுத்து வரக்கூடாது. குடிநீர் பைப்லைன்கள் 36வார்டுகளிலும் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், 36 வார்டுகளிலும் இந்த பணிகள் நடைபெறும் என்று உறுதியளித்தார் நகர்மன்ற தலைவர் கருணாநிதி.
தொடர்ந்து அவர் பேசுகையில் கோவில்பட்டி நகரில் டிஜிட்டல் போர்டு வைக்க நகராட்சியில் உரிய அனுமதி பெற வேண்டும். சட்ட விதிமுறைகளுக்குப்பட்டு, அனுமதி பெற்ற நாள்களுக்கு மேல் டிஜிட்டல் போர்டு வைக்க கூடாது என்றார்.
கோவில்பட்டி நகர் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை காரணமாக பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு வழிகாட்டுதலின் படி நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய ரூ.4 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அதற்கு தேவையான உபகரணங்கள் வாங்குவது என்பது உள்ளிட்ட 64 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.