ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் இரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது .
பயிற்சியின் போது தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் சாந்திராணி கலந்து கொண்டு நீர்நிலைகள் மேலாண்மை பற்றியும் சிறுதானிய பயிர்கள் அவசியம் குறித்தும் பேசினார். தூத்துக்குடி உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் மனோரஞ்சிதம் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் கீழ்உள்ள ஏரி குளம் மற்றும் கண்மாய்களில் இருந்து களிமண் வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கு எடுத்து பயன்பெறுவதற்கான வழிமுறைகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
ஓட்டப்பிடாரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பொறுப்பு சிவகாமி வேளாண்மை துறையின் கீழ் உள்ள மாநில திட்டங்களை பற்றி கூறினார். வாகைகுளம் வேளாண் அறிவியல் மைய நிபுணர் முத்துக்குமார் பயிர் பாதுகாப்பு மற்றும் உர பயன்பாடுகள் குறைப்பதை குறித்தும் அங்கக உரங்களின் பயன்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். துணை வேளாண்மை அலுவலர் ஜெயசீலன் பயிர்களுக்கு சொட்டு நீர் பாசன மானிய திட்டங்களை எடுத்துரைத்தார் . பயிற்சியை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபத்ரா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் செல்வக்குமார், மங்கையர்க்கரசி செய்திருந்தனர்.