• vilasalnews@gmail.com

அக்கநாயக்கன்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்!

  • Share on

மருதன்வாழ்வு, கொடியன்குளம், கீழக்கோட்டை, கலப்பைபட்டி மற்றும்  அக்காநாயக்கன்பட்டி  ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அக்கநாயக்கன்பட்டியில் நடைபெற்றது. முகாமை ஓட்டப்பிடாரம்  சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார் தொடர்ந்து பொதுமக்களின் மனுக்களை பதிவேற்றம் செய்யப்படுவதையும் பார்வையிட்டார். தொடர்ந்து பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா , விலை நிலங்களுக்கு வண்டல் மண் அடிப்பதற்கு ஆணை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இம்முகாமில் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டாட்சியர் சுரேஷ், நில எடுப்பு வட்டாட்சியர் செல்வகுமார், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சுசிலா,சிவில் சப்ளை மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா, வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் அருண்குமார், அய்யாதுரை, சதீஷ்குமார், சண்முகசுந்தரி தங்கராஜ் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • Share on

ஸ்ரீவைகுண்டம் அருகே தேக்கு மரங்களை வெட்டிய இருவர் கைது : வனத்துறையினர் நடவடிக்கை!

ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு!

  • Share on