• vilasalnews@gmail.com

ஸ்ரீவைகுண்டம் அருகே தேக்கு மரங்களை வெட்டிய இருவர் கைது : வனத்துறையினர் நடவடிக்கை!

  • Share on

ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தேக்கு மரங்களை வெட்டிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தாமிரபரணி ஆற்றுப்படுகை பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கருங்குளம் ஆற்றுப்படுகை பகுதியில் சட்டவிரோதமாக தேக்கு மரங்கள் வெட்டியது தெரியவந்தது. 

இதையடுத்து தேக்கு மரங்களை வெட்டிய பொன்னன் குறிச்சி பகுதியை சேர்ந்த இசக்கி மற்றும் மறுகால்தலை பகுதியை சேர்ந்த மாரியப்பன் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறையில் ஆஜர்படுத்தி இருவரையும் சிறையில் அடைத்தனர்.

  • Share on

வட மாநில ஊழியரால் கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகத்தில் பதிவு தபால் அனுப்ப முடியாமல் பொதுமக்கள் பரிதவிப்பு!

அக்கநாயக்கன்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்!

  • Share on