• vilasalnews@gmail.com

விளாத்திகுளத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தனியார் நிலங்களில் நடப்பட இருக்கும் மரங்கள்!

  • Share on

விளாத்திகுளத்தில் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பாக 1000  ஏக்கர் பரப்பளவில் மரங்கள் நடுவதற்கு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மரங்கள் மக்கள் இயக்கம் விளாத்திகுளம் தொகுதி முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டப்பட்டு பராமரித்து வருகின்றனர்.  இதன் தொடர்ச்சியாக, முதற்கட்டமாக 1000 ஏக்கர் பரப்பளவில் தனியார் நிலங்களில் வேப்பமரம் பயிரிடுதல் குறித்து தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண்மை துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 

இந்த கலந்தாய்வு கூட்டத்தில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு விளைநிலங்களில் மரக்கன்றுகள் நட்டி அதை பராமரிப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில், மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக இயக்குனர் ராகவன், அக்ளூட் சிறப்பு பள்ளி நிறுவனர் தனுஷ் கனகராஜ் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

ஓணமாக்குளத்தில் சாலை பணி : யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்!

வட மாநில ஊழியரால் கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகத்தில் பதிவு தபால் அனுப்ப முடியாமல் பொதுமக்கள் பரிதவிப்பு!

  • Share on