• vilasalnews@gmail.com

ஓணமாக்குளத்தில் சாலை பணி : யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்!

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே ஓணமாக்குளத்தில் ரூ.13.50  லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார் .

ஓட்டப்பிடாரம் அருகே ஓணமாகுளம் கிராமத்தில் குருவம்மாள் காலணியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி மற்றும் பண்ணை மேட்டு தெருவில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பணி மேற்பார்வையாளர் முரளி கிருஷ்ணன், திமுக ஒன்றிய அவை தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், துணை தலைவர் ரத்தின பாண்டி, ஊராட்சி செயலர் ராமர், ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், மகளிர் அணி சுப்புலட்சுமி, கிளை செயலாளர் அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

படுக்கப்பத்து கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்!

விளாத்திகுளத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தனியார் நிலங்களில் நடப்பட இருக்கும் மரங்கள்!

  • Share on