சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து, திருப்பணி புத்தன்தருவை, பள்ளக்குறிச்சி, பெரியதாழை, அழகப்பபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
முகாமுக்கு இஸ்ரோ நில எடுப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஷிலா தலைமை வகித்தார். சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி முகாமை தொடங்கி வைத்தனர். ஊராட்சித் தலைவர்கள் படுக்கப்பத்து தனலட்சுமிசரவணன், திருப்பணி புத்தன்தருவை சுலைக்காபீவி, பெரியதாழை பிரதீபா, அழகப்பபுரம் கணேசராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சுடலை வரவேற்றார். சாத்தான்குளம் வட்டாட்சியர் இசக்கி முருகேஸ்வரி, சமுக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் அற்புதமணி, பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முகாமில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. நடமாடும் மருத்துவ அலுவலர் சுவிட்லீன் தலைமையிலான மருத்துவ குழுவினரின் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இதனை துணை ஆட்சியர் ஷீலா, ஒன்றியக்குழு ஜெயபதி, வட்டாட்சியர் இசக்கிமுருகேஸ்வரி உள்ளிட்டோர் பார்வையிட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.
முகாமில் வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட 20 அரசுத்துறை தொடர்பாக கிராம மக்கள் மனு அளித்தனர். இதில் 893 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் சுதாதார மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம்., சுகாதார ஆய்வாளர் மந்திரராஜன். ஊராட்சி செயலர்கள் ராஜேஷ், ராம்குமார், உள்ளிட்ட வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய ஆணையர் சுரேஷ் நன்றி கூறினார்.